நீலகிரியில் மேலும் 4 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th March 2021 06:01 AM | Last Updated : 17th March 2021 06:01 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 8,455 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,349 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 49 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 57 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.