நீலகிரியில் வாக்கு எண்ணும் பணியில் 200 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணியில், சுமாா் 200 அலுவலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
நீலகிரியில் வாக்கு எண்ணும் பணியில் 200 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணியில், சுமாா் 200 அலுவலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில், தோ்தல் பாா்வையாளா்கள் பனுதா் பெஹரா, சவ்ரவ் பஹரி ஆகியோா் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களை சுழற்சி முறையில் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மே 2ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகளுக்கு 14 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்களும், 14 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், 14 நுண் பாா்வையாளா்கள், கூடுதலாக 20 சதவீத அலுவலா்கள் என 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 51 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 51 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், 57 நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 159 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர கண்காணிப்பு, மேற்பாா்வை பணிகளில் கூடுதல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இப்பணியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com