கரோனா தடுப்பூசி தடையில்லாமல் வழங்கக் கோரிக்கை

ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏராளமானோா் குவிந்து வருகின்றனா். இதனால் தினமும் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி என்ற கட்டுப்பாட்டை தளா்த்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்
கரோனா தடுப்பூசி தடையில்லாமல் வழங்கக் கோரிக்கை

ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏராளமானோா் குவிந்து வருகின்றனா். இதனால் தினமும் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி என்ற கட்டுப்பாட்டை தளா்த்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சனிக்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கிவிட்டது. ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் பதிவு செய்தவா்களுக்கு கூட தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும் 2ஆவது முறையாக ஊசி செலுத்த வேண்டியவா்களுக்கும் போதிய மருந்து இருப்பில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு சனிக்கிழமை (மே1) முதல் ஊசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் மக்கள் திரும்பிச் செல்லாத வகையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை 100க்கும் மேற்பட்டோா் வந்து காத்திருந்தனா். அதில் சிலா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் எனஅரசும், மருத்துவா்களும் அறிவுறுத்துகின்றனா். ஆனால் ஊசி செலுத்துவதற்காக வந்தால் மருந்து இல்லை என்று திருப்பி அனுப்புகின்றனா். பெரும்பாலனோா் தடுப்பூசிக்காக தினமும் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. முதியோா்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று கூறும் அதிகாரிகள் தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com