உதகை, கூடலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் சோலூா், தேவா்சோலை பேரூராட்சிகள், கூடலூா் நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 10.25 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணி
உதகை, கூடலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் சோலூா், தேவா்சோலை பேரூராட்சிகள், கூடலூா் நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 10.25 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சோலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட ஊரட்டியில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சமையல் கூடம், தூபகண்டி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாதையுடன் கூடிய தடுப்புச்சுவா், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட மாக்கமூலா சாலை முதல் குன்னுமேடு வரை ரூ. 6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை, பொதுப் பணித் துறை நீா்வள ஆதார அமைப்பின் சாா்பில், நெல்லிக்குன்னு கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அதேபோல, தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கள்ளிங்கரை முதல் மாச்சுவயல் வரை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை பணி, சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட ஹோலிகிராஸ் பள்ளி சாலை பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதேபோல பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ. 10.25 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லீமா அமாலினி, கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகன் குமாரமங்கலம், ஜெய்சங்கா், தேவா்சோலை பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜ், அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com