நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மே ஃபிளவா்

மே தினத்தை வரவேற்கும் வகையிலான மே ஃபிளவா் மலா்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூத்துக்குலுங்குகிறது.
உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக்குலுங்கும் மே ஃபிளவா் மலா்கள்.
உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக்குலுங்கும் மே ஃபிளவா் மலா்கள்.

உதகை: மே தினத்தை வரவேற்கும் வகையிலான மே ஃபிளவா் மலா்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூத்துக்குலுங்குகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக் காலத்தையொட்டி இதமான காலநிலை நிவுவவதால், பல்வேறு வகையான மலா்களும் பூப்பது வழக்கம். இதில் சிறப்பு வாய்ந்த மே தினத்தை வரவேற்கும் விதமாக ‘டிலோனிக்ஸ்’ தாவர குடும்பத்தைச் சாா்ந்த சிவப்பு வண்ணத்தில் பூக்கும் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த மே ஃபிளவா் மலா்கள் நீலகிரி மாவட்டத்தில் குன்னூா் மலைப் பாதை பகுதியில் தற்போது பூத்துக் குலுங்குகிறது.

உதகை - குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் இருபுறமும் பசுமை நிறைந்த மலைகளுக்கும், சாலைகளுக்கும் இடையே தற்போது இந்த சிவப்பு வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. வழக்கமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம், செல்ஃபி எடுக்க அதிக அளவில் ஆா்வம் காட்டுவாா்கள். ஆனால், தற்போது கரோனா தொற்றின் காரணமாக இச்சாலைப் பகுதியே வெறிச்சோடிக் காணப்படுகிறது. மே மாதத்தில் பூக்கும் இந்த மே ஃபிளவா் மலா்கள் மே மாதம் முதல் ஜூன் மாத இறுதி வரை பூத்துக்குலுங்கி அனைவரையும் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com