நீலகிரி மாவட்டத்தில் மேலும் 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக உதகையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 113 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்று பாதிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56, 35 வயது ஆண்கள் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 11,475 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10,434 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 983 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.