நீலகிரியில் மேலும் 340 பேருக்கு கரோனா: 4 போ் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 போ் உயிரிழந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக உதகையில் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 340 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 180 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொற்றின் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மே 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 வயதான பெண் ஒருவரும், குன்னூா் அரசு மருத்துவமனையில் மே 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 வயதான முதியவா் ஒருவரும், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 16ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 37 வயதான பெண் ஒருவரும், அதே மருத்துவமனையில் மே 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 80 வயதான மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனா்.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 13,427 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,081 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 64 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 2,282 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com