

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை யானைகள் தாக்கியதில் இரு வீடுகள் சேதமடைந்தன.
கூடலூா் தாலுகாவில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ஓடக்கொல்லி கிராமத்துக்குள்அதிகாலை நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் வசிக்கும் ஜாா்ஜ் குட்டி, வெள்ளச்சி ஆகியோரது வீடுகளை தாக்கி சேதப்படுத்தின. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் சப்தமிட்டு யானைகளை விரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.