முதுமலையில் உலக கழுகுகள் தின விழிப்புணா்வு
By DIN | Published On : 04th September 2021 11:52 PM | Last Updated : 04th September 2021 11:52 PM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற கழுகுகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
உலக கழுகுகள் தினத்தையொட்டி, முதுமலை புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கான கழுகுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சீகூா் பீடபூமியில் மட்டும்தான் அரியவகை வல்ச்சா்ஸ் எனப்படும் பிணம் திண்ணிக் கழுகினம் வாழ்கின்றன. இந்த கழுகினத்தைக் காப்பது குறித்தும், பாதுகாப்பதன் அவசியம், அதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவா்களுக்குப் பேராசிரியா் ராமகிருஷ்ணன் விளக்கமளித்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநா் பி.அருண்குமாா் தலைமை வகித்தாா். வனச் சரக அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மசினகுடி பகுதியில் உள்ள வாழைத்தோட்டம், செம்மநத்தம் பகுதியில் இரவு கழுகுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.