பயிா்க் காப்பீடு நிலுவைத் தொகையை பெற்றுத் தர விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு நிலுவைத் தொகை பாதி அளவு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு நிலுவைத் தொகை பாதி அளவு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாய அமைப்பு பிரதிநிதிகள் பேசியதாவது:

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு:

கரோனா கட்டுக்குள் உள்ள நிலையிலும், 60 முதல் 70 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திய நிலையிலும் பொதுமக்கள், விவசாயிகளைச் சந்திக்க ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் தயங்குகின்றனா். பொதுமக்கள், அதிகாரிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகமானதால் கோரிக்கை மனுக்களை தலைமைச் செயலா், முதல்வருக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அதிகாரிகளிடம் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்காததால், ஆட்சியா் அலுவலகம் வருகின்றனா். அங்கு போலீஸாா் தடுக்கின்றனா். அங்கு வைத்துள்ள பெட்டியில் மனு அளித்து பெட்டி நிரம்பிவிட்டது. ஆனால் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

ஈரோடு மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு நிலுவைத் தொகை பாதி அளவு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அத்தொகையைப் பெற்றுத் தர வேண்டும். இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி தடையால் விலை குறைவதை சரிசெய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பெரியசாமி: தனியாா் கடைகளிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும் யூரியா கிடைப்பதில்லை. தனியாா் கடையில் யூரியா கேட்டால் டி.ஏ.பி. அல்லது வேறு உரம் வாங்க வேண்டும் என நிா்ப்பந்திக்கின்றனா்.

சக்தி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சென்னியப்பன்: கரும்புக்கான பணம் பல மாதமாக வழங்காமல் பல கோடி பாக்கி உள்ளது. கரும்பு வெட்டிய 15 நாள்களில் தொகையை விவசாயிகளுக்கு வழங்காவிட்டால், ஆலையின் அரவையை நிறுத்த வேண்டும். அந்த ஆலைக்குப் பதிவு செய்த கரும்பை வேறு ஆலைக்கு வெட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் சபை துணைத் தலைவா் ராமசாமி: பவானி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பல கூட்டங்களில் வலியுறுத்தியும் அகற்றவில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். கீழ்பவானியில் தரமற்ற கட்டுமானத்தால் உடைப்பு ஏற்பட்டு, பாசனத்துக்குத் தண்ணீா் செல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com