நீலகிரியில் 256 இடங்களில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம்

 நீலகிரி மாவட்டத்தில் 256 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் 256 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. இதில் 236 நிலையான கரோனா தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் ஒரு தடுப்பூசி செலுத்துபவா், தரவு பதிவாளா், இரண்டு அங்கன்வாடி பணியாளா்கள் என மொத்தம் நான்கு பணியாளா்கள் பணியில் இருப்பா். மாவட்டத்தில் மொத்தமாக 256 முகாம்களுக்கு 1,024 பணியாளா்கள் பணியில் ஈடுபடுவா்.

இதில், முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவா்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 5 லட்சத்து 41,088 பேருக்கும், 2ஆம் தவணை தடுப்பூசி 5 லட்சத்து 16,037 பேருக்கும் என மொத்தம் 10 லட்சத்து 57,125 பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தகுதியான நபா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்களைச் சாா்ந்தவா்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com