நீலகிரி கோடை விழா: கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று துவங்கியது

நீலகிரி மாவட்டத்தின் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில்  இன்று 11 வது  காய்கறி கண்காட்சி  துவங்கியது.
நீலகிரி  கோடை விழா: கோத்தகிரியில் 11-வது  காய்கறி கண்காட்சி  இன்று துவங்கியது
Updated on
2 min read

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில்  இன்று 11 வது  காய்கறி கண்காட்சி  துவங்கியது.

நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்வான 11-வது காய்கறி கண்காட்சி மே 7,8 ஆகிய தேதிகளில் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில துவங்கியது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி  விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும்  நடத்தப்படும் இந்த கண்காட்சியில்  தமிழகத்தில்  உள்ள  கோவை, திருவண்ண்மலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த  தோட்டக்கலை துறையினர் சார்பில் கத்தரிக்காய், பூசனிக்காய், கேரட், பீட்ரூட், கேரட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரி குதிரை, மீன் போன்றவை காண்பவர்கள்  கண்களுக்கு விருந்தாக  அமைந்தது.

இங்கு பல்வேறு  காய்கறிகளால் உருவான 12 அடி உயர, 7 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட   பிரமாண்ட ஒட்டக சிவிங்கியும், 7அடி உயரம், 5அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட ஒட்டக சிவிங்கியின் குட்டி  1500 கிலோ  கேரட் மற்றும் முள்ளங்கியால் உருவாக்கப்பட்டிருந்தது  சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. உதகை 200 சுயபடம் எடுக்கும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட சிற்பம் சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்து இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக கோடை விழா நடைபெறாமல் இருந்த சூழலில் இந்த ஆண்டு துவங்கிய கோடை விழாவின்  துவக்க நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com