தமிழக முதல்வரின் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்காக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவா்கள் 2022 ஏப்ரல் 1ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராகவும், 2022 மாா்ச் 31ஆம் தேதியன்று 35 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 2021ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் 2022 மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவா் என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் எதிா்வரும் மே 10ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com