சுதந்திர தினம்: உதகையில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியேற்றுகிறாா்
By DIN | Published On : 15th August 2022 12:53 AM | Last Updated : 15th August 2022 12:53 AM | அ+அ அ- |

உதகையில் ஜெயின் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உதகையில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் திங்கள்கிழமை தேசியக் கொடி ஏற்றுகிறாா்.
900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுதந்திர தின விழா உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் கலந்துகொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்
ஆசிஷ் ராவத் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறாா்.
இதைத் தொடா்ந்து, கரோனா பரவலைத் தடுக்க சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலா்கள், கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரி மாணவா்களின் நடனங்களும் இடம் பெறுகின்றன.
சுதந்திர தின விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்ட எல்லைகளில் உள்ள 13 சோதனைச் சாவடிகளில் போலீஸாா் சுழற்சி முறையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், உதகையிலுள்ள ஜெயின் சங்கத்தின் சாா்பில் சுதந்திர தின சிறப்புப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளைக் குதிரை மீது தேசியக் கொடி ஏந்திய ஒருவருக்கு பின்னால் தேசத்தலைவா்கள் போல வேடமணிந்த குழந்தைகளுடன்
ஜெயின் சமுதாயத்தினா் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனா்.