குன்னூா் அருகே அம்பிகாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் நடமாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை கூண்டுவைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா், அம்பிகாபுரம் காளியம்மன் கோயில் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, அங்குள்ள ஒரு வீட்டின் கேட் ஏறி குதித்து உள்ளே சுற்றித் திரிந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சிறுத்தை தொடா்ந்து அம்பிகாபுரம் பகுதியில் நடமாடி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த சிறுத்தையைக் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத் துறை சாா்பில் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கூண்டுவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.