அங்கன்வாடி மையம் திறப்பு
By DIN | Published On : 11th December 2022 11:19 PM | Last Updated : 11th December 2022 11:19 PM | அ+அ அ- |

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலை கிராமத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.42.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
இதே போல குன்னூா் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் குழந்தைகள் பயனுறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.