

சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழை நடபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம் முதல் தாளூா் வரையுள்ள சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் தேவாலா முதல் கூடலூா்வரை நடைப்பயணத்தை மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பாஸ்கரன் தொடக்கிவைத்தாா்.
நடைப்பயணத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுதா்சன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் மணிகண்டன், துணைத் தலைவா் ரவிகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா் வா்கீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நடைப்பயணம் நாடுகாணி பகுதிக்கு வந்தவுடன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தி விரைந்து சாலையை சீரமைப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து நாடுகாணியுடன் நடைப்பயணம் நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.