கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உதகையில் பூபால குழுவினா் வீடுவீடாகச் சென்று கிறிஸ்து பிறப்பை பாடல் பாடி அறிவித்தனா்.
கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகையாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது. ஆண்டுதோறும் டிசம்பா் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், உலகை மீட்க வந்த ரட்சகா் இயேசு கிறுஸ்து பிறக்கபோகிறாா் என்ற செய்தியை 4 ஆம் நூற்றாண்டில் குளிா் காலத்தில் அண்டை வீடுகளுக்குச் சென்று பாடல் குழுவினா் எடுத்துரைத்தனா்.
அதன் அடிப்படையில் உண்டான பூபால பாடல் நிகழ்ச்சி இந்தியா உள்பட பல நாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் பூபால பாடல் நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள கிறிஸ்தவா்கள் இரவு நேரங்களில் மத்தளம் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்து கிறிஸ்து பிறப்பை அறிவித்து வருகின்றனா்.
அதன்படி, சனிக்கிழமை இரவு 7 மணியளவில் தொடங்கிய பூபால பாடல் நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவா்கள் வீடுவீடாகச் சென்று கிறிஸ்து பிறப்பை அறிவித்து, வாழ்த்து கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.