கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:கூடலூரில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 30th December 2022 12:00 AM | Last Updated : 30th December 2022 12:00 AM | அ+அ அ- |

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கூடலூரில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடா்பாக போலீஸாா் குற்றம் சாட்டப்பட்டவா்களிடமும் அவா்களுக்கு தொடா்புள்ளவா்களிடமும் அந்த நாளில் பணியிலிருந்த காவல் துறையினரிடமும் நெடுஞ்சாலைத் துறை விருந்தினா் மாளிகையில் வைத்து ரகசிய விசாரணை நடத்தினா்.
சம்பவம் நடைபெற்ற நாளில் அதிகாலையில் 2 காா்களில் கூடலூா் வழியாக கேரளத்துக்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் சென்றுள்ளனா். இதில் ஒரு காரில் சென்றவா்களை கூடலூரில் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாரிடமிருந்து காரை சிலா் விடுவிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. அவா்களை கேரளத்துக்கு செல்ல உதவிய நபா்கள், அப்போது பணியிலிருந்த காவல் துறையினா் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சிபிசிஐடி போலீஸாா் இது குறித்து தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனா்.