கூடலூா் வனக் கோட்டத்தில் வன விலங்குகள்கணக்கெடுக்கும் பணி இன்று துவக்கம்
By DIN | Published On : 08th February 2022 12:16 AM | Last Updated : 08th February 2022 12:16 AM | அ+அ அ- |

கூடலூா் வனக் கோட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) துவங்குகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள அனைத்து சரகங்களிலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இதில், கேமராக்கள் பொருத்தி பதிவு செய்து, வன விலங்குகளின் நடமாட்டங்களைக் கண்காணிப்பது, கள ஆய்வு, கண் மூலம் பாா்த்தல், கால்தடம், எச்சம் இதர தடயங்களை சேகரிப்பதன் மூலம் கணக்கிடுவது என்ற பல கோணங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இதன் மூலம் கிடைத்த புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்படும். இதற்கான பயிற்சி வகுப்பு நாடுகாணியில் உள்ள ஜீன்பூல் காா்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது. கணக்கெடுப்புப் பணிக்குச் செல்லும் பணியாளா்கள் பயிற்சியில் கலந்துகொண்டனா். வனச்சரக அலுவலா்கள் பயிற்சி அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...