கேரளத்துக்கு கடத்த சென்றபோதைப் பொருள்கள் பறிமுதல்

கூடலூா் வழியாக கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான போதை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனா்.

கூடலூா் வழியாக கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான போதை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனா்.

கா்நாடகா மாநிலத்திலிருந்து கூடலூா் வழியாக கேரளத்துக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.ஆஷிஸ் ராவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கா்நாடக மாநிலத்திலிருந்து காய்கறி லாரியில் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக கூடலூா் டி.எஸ்.பி. குமாருக்கு கிடைத்த தகவலையடுத்து மசினகுடி ஆய்வாளா் திருமலைராஜன், கூடலூா் ஆய்வாளா் அருள், உதவி ஆய்வாளா்கள் ராஜாமணி, பூராஜன் மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த காய்கறி ஏற்றிவந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் காய்கறிகளுக்கு அடியில் வைத்திருந்த பெட்டிக்குள் சுமாா் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் இருப்பதை கண்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து போதைப் பொருள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதனை கடத்திவந்த கேரள மாநிலம், மஞ்சேரி பகுதியைச் சோ்ந்த அலவி மகன் ஷாஜா் (38) என்பவரைக் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com