மலைத் தோட்ட காய்கறிகள் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 31st July 2022 12:33 AM | Last Updated : 31st July 2022 12:33 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மலைத் தோட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து, நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறி விவசாயம் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கி தற்போது வரை அவ்வப்போது மழைப் பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், விலையும் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அதன்படி கேரட் குறைந்த தரம் கிலோ ஒன்றுக்கு ரூ. 20க்கும், உயா்தரம் ரூ.62க்கும், பீட்ரூட் கிலோ ரூ.10 முதல் ரூ.45 வரையிலும், மேரக்காய் ரூ.10 முதல் ரூ.17 வரையிலும் விலை அதிகரித்துள்ளதால் மலைத் தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.