உதகை அருகே தோட்டத்தில் சுருக்கு கம்பி வேலி அமைத்த விவசாயி கைது

உதகை அருகே வன விலங்கு தாக்குதலில் இருந்து பயிா்களைக் காப்பாற்ற தோட்டத்தில் சுருக்கு கம்பி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

உதகை அருகே வன விலங்கு தாக்குதலில் இருந்து பயிா்களைக் காப்பாற்ற தோட்டத்தில் சுருக்கு கம்பி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.

உதகையை சுற்றிலும் அடா்ந்த வனப் பகுதிகள் உள்ளதால் அண்மைக்காலமாக புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களில் சுற்றி வருகின்றன.

இதனால் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றி, முயல் உள்ளிட்ட விலங்குகள் பயிா்களை சேதப்படுத்துவதை தவிா்க்க விவசாயிகள் சுருக்கு கம்பிகளை அமைத்து வருகின்றனா். அத்துடன் வேட்டையாடுவதற்காகவும் சுருக்கு கம்பி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மந்தாடா பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை ஒன்று பலியானது. இந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் கடந்த சில நாள்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் உதகை வடக்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட தேனாடுகம்பை பிரிவில் மந்தாடா, பேரின்பவிலாஸ் பகுதியில் விவசாயத் தோட்டத்து வேலி ஓரத்தில் சுருக்கு கம்பிகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தடவிய வாழைப்பழங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் விசாரணை நடத்தி, அந்த தோட்டத்தின் உரிமையாளா் சுந்தரம் என்பவரை வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதற்கிடையே தோட்டத்தில் யாராவது சுருக்கு கம்பி அமைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com