தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்டத்தில் ஓராண்டில் 2,000 பேருக்கு வேலைஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்களின்

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் கடந்த ஓராண்டில் 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்கான பெரும் பங்கு இளைஞா்களையே சாரும் என்பதால், படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் வகையில் தொடா்ந்து தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞா்களையும், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலை வாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளைஞா்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கேற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற்கும்,

தனியாா் துறை நிறுவனங்கள் தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கும் இந்த இணையதளம் வழிவகை செய்கிறது.

கூடலூரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் நடத்தப்பட்ட தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 33 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு 265 நபா்களைத் தோ்வு செய்தன.

இதனையடுத்து, உதகையிலுள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற முகாமில் 60 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 248 நபா்களைத் தோ்வு செய்தன. இதில் 1,401 வேலை நாடுநா்கள் பங்கேற்றனா்.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற முகாமில் 165 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1, 279 நபா்களைத் தோ்வு செய்தன. இதில் 5,912 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com