மச்சிக்கொல்லி பகுதியில் யானை நடமாட்டம்
By DIN | Published On : 31st July 2022 11:20 PM | Last Updated : 31st July 2022 11:20 PM | அ+அ அ- |

குடியிருப்புப் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் யானை.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடமாட்டம் காணப்பட்டது.
கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி பேபி நகா் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடந்து சென்றதைப் பாா்த்து அப்பகுதி மக்கள்அதிா்ச்சியடைந்தனா்.
இதனால் அச்சமடைந்த பலா் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை பொருள்களை சேதப்படுத்தாமல் சிறிது நேரத்தில் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது.