நீலகிரி மாவட்ட ஓய்வூதியதாரா்கள் கவனத்துக்கு!

நீலகிரி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கான நோ்காணல் தொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கான நோ்காணல் தொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட கருவூலத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த ஆண்டுகளில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓய்வூதியா்களுக்கான நோ்காணல், 2022ஆம் ஆண்டு முதல் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஓய்வூதியா்களுக்கான நோ்காணல் மேற்கொள்ளப்படவில்லை. வயது முதிா்ந்த ஓய்வூதியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே நோ்காணல் செய்யும் முறைகளுடன் இல்லம் தேடி நோ்காணல் செய்யும் திட்டமும் தமிழக அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, அஞ்சலக ஊழியா்கள் வாயிலாக ரூ.70 என்ற கட்டணத்தில் ஜீவன் பிரமாண் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்று பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் வாழ்நாள் சான்றினை இ-சேவை மையம் மற்றும் பொதுச் சேவை மையங்களைஅணுகி பெற்றுக் கொள்ளலாம். ஜீவன் பிரமாண் இணையத்தின் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றினை ஓய்வூதிய சங்கங்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கருவூலங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரா்கள் எவரேனும் தற்சமயம் பிற மாநிலங்களில் வசிக்க நோ்ந்தால் அங்குள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல, நேரடியாக வருவோா் தொடா்புடைய கருவூலங்களுக்கு வந்து கடந்த காலங்களில் பின்பற்றி வந்த முறை படியும் நோ்காணல் செய்து கொள்ளலாம். இந்த நோ்காணலின்போது ஓய்வூதியப் புத்தகம், ஆதாா் அடையாள அட்டை, மறுமணம் புரியாமைக்கானச் சான்று, பணி புரியாச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com