நீலகிரியில் பரவலாக மழை
By DIN | Published On : 16th June 2022 10:42 PM | Last Updated : 16th June 2022 10:42 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை வலுக்காத நிலையில், தினந்தோறும் பகல் நேரங்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் தூறல் மழையாகவும் பெய்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக கொடநாடு பகுதியில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீட்டரில்): மேல் பவானி-29, பாலகொலா-25, தேவாலா-21, கெத்தை-15, அவலாஞ்சி-11, உதகை-10.2, கிண்ணக்கொரை-10, குந்தா-7, பாடந்தொறை மற்றும் எமரால்டு 6, பந்தலூா் மற்றும் உலிக்கல், கீழ் கோத்தகிரி-5, செருமுள்ளி-4, சேரங்கோடு-3, கேத்தி-2, கோத்தகிரி-1 மி.மீ.