தூய்மை நகரங்களுக்கான விழிப்புணா்வு
By DIN | Published On : 26th June 2022 11:49 PM | Last Updated : 26th June 2022 11:49 PM | அ+அ அ- |

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள பாடந்தொரை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம் ஷா, செயல் அலுவலா் நடராஜன், பேரூராட்சித் தலைவா் பா.வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்தல், மஞ்சப் பை உபயோகம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G