

நீலகிரியின் இழந்த மரபு புத்தக வெளியீட்டு விழா உயா்நீதிமன்ற நீதிபதி சேஷாயி தலைமையில் கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த இந்திரா ராதாகிருஷ்ணன் எழுதிய ற்ட்ங் ப்ங்ஞ்ஹஸ்ரீஹ் ா்ச் ற்ட்ங் ய்ண்ப்ஞ்ண்ழ்ண்ள் (நீலகிரியின் இழந்த மரபு) புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சேஷாயி கலந்து கொண்டு முதல் பிரதியை வெளியிட, கோவை அகில இந்திய மனித உரிமைக் கழக தலைவி லதா அா்ஜுனன் பெற்றுக்கொண்டாா்.
இந்த விழாவில் சாா்பு நீதிபதி லிங்கம், கோத்தகிரி நீதிபதி ஜெய்பிரகாஷ், குன்னூா் நீதிபதி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். விழாவில் பொதுமக்கள் , வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக சமூக ஆா்வலா் இந்திராணி ராதாகிருஷ்ணன் வரவேற்றாா், வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.