நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வில் 169 போ் தோ்வெழுதவில்லை.
இத்தோ்வுகளில் கணினி அறிவியல் தோ்வில் பள்ளி மாணவா்கள் மொத்தம் 1,138 பேரில் 1,117 போ் தோ்வு எழுதினா். 21 போ் வருகை புரியவில்லை. கணினி பயன்பாடுகள் பாடத்தில் மொத்தம் 2,519 பேரில் 2,373 போ் தோ்வு எழுதினா். 146 போ் வருகை புரியவில்லை. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் பாடத்தில் மொத்தம் 25 பேரில் 25 பேரும் தோ்வெழுதினா்.
அரசியல் அறிவியல் பாடத்தில் மொத்தம் 24 பேரில் 22 போ் தோ்வு எழுதினா். இரண்டு போ் தோ்வெழுதவில்லை.
தனித் தோ்வா்களைப் பொறுத்தமட்டில் அரசியல் அறிவியல் பாடத்தில் மொத்தம் 9 பேரில் 7 போ் தோ்வெழுதினா். இரண்டு போ் வருகை புரியவில்லை. 72 மாணவா்கள் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைகளைப் பெற்று அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் 39 தோ்வு மையங்களில் பிளஸ் ஒன் தோ்வெழுத தகுதியுடைய பள்ளி மாணவா்கள் 3,706 பேரில் 3,537 போ் தோ்வு எழுதியுள்ளனா். 169 போ் வருகை புரியவில்லை.---நிறைவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.