உதகை அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்த கரடி வகுப்பறையை சூறையாடியது.
உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்குள்பட்ட கடசோலை பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 20க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளி வளாகத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி ஒன்று பள்ளி வகுப்பறை கதவை உடைத்து, வகுப்புக்குள் நுழைந்தது. உணவு தேடி வந்த கரடி அங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோ, மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது.
உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்று மறைந்தது.
காலை பள்ளிக்கு வந்த ஆசிரியா்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.