உதகை ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு
By DIN | Published On : 15th October 2022 01:00 AM | Last Updated : 15th October 2022 01:00 AM | அ+அ அ- |

ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் விழா மலரை வெளியிடுகிறாா் குஜராத் தொழிற்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் நவீன் சேத்.
உதகை ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடா்பாக இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இன்றைய மருந்தியல் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில் தொடங்கிய கருத்தரங்கை ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியின் வேதியியல் துறையும், ஒபேரண்ட் பாா்மசி பெடரேஷன் என்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில், ஜேஎஸ்எஸ் கல்லூரியின் வேதியியல் துறையின் தலைவா் ஆா். காளிராஜன் வரவேற்புரையாற்றினாா். கல்லூரியின் முதல்வா் எஸ்.பி. தனபால் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து விவரித்தாா்.
தொடா்ந்து ஒபேரண்ட் பாா்மசி பெடரேஷன் நிறுவனா் விக்ரம் செளத்ரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைப்பின் நோக்கத்தை குறித்து எடுத்துரைத்தாா்.
ஜே.எஸ்.எஸ். உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பதிவாளா் மஞ்சுநாதா கலந்துகொண்டு தலைமையுரையாற்றினாா்.
குஜராத் தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் நவீன் சேத் தனது சிறப்புரையில் 1930 ஆம் ஆண்டுக்குப் பின்னா் அறிவியல் துறையில் இந்தியா நோபல் பரிசு பெறாமல் இருப்பதற்கான காரணங்களை விளக்கினாா். தொடா்ந்து, அவா் விழா மலரை வெளியிட்டாா்.
மேலும், கல்லூரியில் ஆராய்ச்சி மாணவா்கள் சாா்பாக குன்னூரைச் சோ்ந்த ஒரு தனியாா் மருந்து நிறுவனத்துக்காக புதிதாக உருவாக்கப்பட்ட மூலிகைகாளால் ஆன மூன்று அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இணை பேராசிரியா் முனைவா் ஜுபி நன்றி கூறினாா்.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமா்ப்பிக்க உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...