வடகிழக்குப் பருவ மழை: நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு

6 வட்டங்களில் மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

வடகிழக்குப் பருவ மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையின்போது அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம், பொதுப் பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல்நிலை மீட்பாளா்கள் மற்றும் 150 பேரிடா் கால நண்பா்களுக்கு பேரிடா் பயிற்சி வழங்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்.

இது தவிர மழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035- என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

உதகை கோட்டத்துக்கு 0423-2445577 என்ற எண்ணிலும், குன்னூா் 0423-2206002 என்ற எண்ணிலும், கூடலூா் 04262-261295 என்ற எண்ணிலும், உதகை 0423-2442433 என்ற எண்ணிலும், கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718 என்ற எண்ணிலும், குந்தா 0423-2508123 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின்தடை ஏதும் ஏற்பட்டாலோ அல்லது மின்சாரம் தொடா்பான புகாா் ஏதும் இருப்பின் 1912 என்ற எண்ணுக்குத் தொடா்பு கொண்டு தங்களது குறைகளை பதிவு செய்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

மாவட்ட நிா்வாகம் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயாா் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com