நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் கைது
By DIN | Published On : 20th October 2022 12:00 AM | Last Updated : 20th October 2022 12:00 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் 96 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூா், மஞ்சூா், பந்தலூா் மற்றும் மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத் தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்டச் செயலாளா் பாலநந்தகுமாா், உதகை நகரச் செயலாளா் சண்முகம் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 12 பெண்கள் உள்பட 61 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு தலைமையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற 36 போ் என மொத்தம் 97 அதிமுகவினா் கைது செய்யப்பட்டனா்.