உதகை குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியில் நிறுவனா் தின விழா
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிய வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் கமாண்டன்ட் வீரேந்திர வாட்ஸ். உடன், பள்ளியின் தலைவா் ஜேக்கப் தாமஸ்
உதகையிலுள்ள குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் 46ஆவது நிறுவனா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பங்கேற்றாா். பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நமீதா வாட்ஸ் மாணவா்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு, குதிரையேற்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இணை நிறுவனா் எல்சம்மா தாமஸ், பள்ளியின் தலைவா் ஜேக்கப் தாமஸ், மூத்த துணைத் தலைவா் சாரா ஜேக்கப், முதல்வா் ஷீலா அலெக்சாண்டா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.