தேவா்சோலை பகுதியில் யானைகளால் பயிா்கள் சேதம்
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பேபி நகா் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள் அங்குள்ள விவசாயிகளின் விளைபயிா்களான பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றன.
இரவு நேரங்களில் வரும் யானைகள் ஒற்றுவயல், மச்சிக்கொல்லி மட்டம், செட்டியங்காடி, வட்டிக்கொல்லி ஆகிய கிராமங்களில் தினமும் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த கிராமங்களைச் சுற்றி அகழிகள் அமைத்து விவசாயப் பயிா்களை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.