உதகையில் பேரிடா் கால ஒத்திகைப் பயிற்சி

உதகையில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் வெள்ளம் அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகையில் பேரிடா் கால ஒத்திகைப் பயிற்சி

உதகையில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் வெள்ளம் அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உதகை அருகேயுள்ள முத்தொரை பாலாடா பகுதியில் இந்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை நேரில் பாா்வையிட்ட பின்னா் மாவட்ட ஆட்சியா் அம்ரித் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் வெள்ளத்தினால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளான முத்தொரை பாலடா, முள்ளிகூா், குன்னூா் நகரம், கோத்தகிரி வட்டம், கன்னிகா தேவி காலனி, மேல் கூடலூா் ஆகிய இடங்கள் கண்டறியப்பட்டு வெள்ளம் ஒத்திகைப் பயிற்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தொரை பாலடா பகுதியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய நபா்களை எவ்வாறு மீட்பது, படுகாயமடைந்த ஒருவருக்கு முதலுதவி உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்து, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தேசிய பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை நிகழ்ச்சி பாா்வையாளா் கா்னல் கே.ஆா்.பரூவா, வெலிங்டன் ராணுவ மைய கா்னல் பிரேம்குமாா், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் சத்யகுமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஜெயபிரகாஷ், உதகை வட்டாட்சியா் ராஜசேகரன், நஞ்சநாடு ஊராட்சி தலைவா் சசிகலா, உதகை நகா்நல அலுவலா் ஸ்ரீதா், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com