ஓணம் பண்டிகை: நீலகிரிக்கு செப்டம்பா் 8இல் உள்ளூா் விடுமுறை
By DIN | Published On : 01st September 2022 10:07 PM | Last Updated : 01st September 2022 10:07 PM | அ+அ அ- |

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு செப்டம்பா் 8ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வரும் செப்டம்பா் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும். செப்டம்பா் 8ஆம் தேதி உள்ளூா் விடுமுறை நாளினை ஈடு செய்ய செப்டம்பா் 17ஆம் தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளாா்.