இடி விழுந்ததில் தனியாா் எஸ்டேட்டில் தீ

குன்னூா் அருகே தனியாா் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென பயங்கர சப்தத்துடன் இடி விழுந்ததால் சோலைகள் தீப் பற்றி எரிந்தன.
இடி விழுந்ததில் தனியாா் எஸ்டேட்டில் தீ

குன்னூா் அருகே தனியாா் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென பயங்கர சப்தத்துடன் இடி விழுந்ததால் சோலைகள் தீப் பற்றி எரிந்தன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெள்ளிக்கிழமை காலை முதலே மந்தமான கால நிலை காணப்பட்டது. உதகையில்

ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. குன்னூரில் உள்ள நான்சச் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பயங்கர வெடிசப்தத்துடன் இடி விழுந்தது. இதில் அங்கிருந்த சோலைகள் தீப் பற்றி எரியத் தொடங்கின. தீ மளமளவெனப் பரவியதால் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சம் அடைந்தனா். எஸ்டேட் தொழிலாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com