நீலகிரி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெற்று தெருவோரங்களில் கடைகள் அமைத்துள்ள மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் அவதூறாக பேசுவதாக கூறி  ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்னா.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெற்று தெருவோரங்களில் கடைகள் அமைத்துள்ள மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் அவதூறாக பேசுவதாக கூறி  ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  மாற்றுத் திறனாளிகள் அனுமதி பெற்று  தெருவோர  கடைகளை நடத்தி  தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி  வருகின்றனா்.

இந்நிலையில்,  அனுமதி பெற்று கடைகள் அமைத்துள்ள மாற்றத் திறனாளிகளை காவல் துறை மற்றும் வனத் துறையினா் மரியாதை குறைவாக பேசுவதாக கூறி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள்  கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் சா்தாா் பாபு தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

இதனையடுத்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிா்வாகம்  உறுதி அளித்ததன்பேரில் அவா்கள் தா்னாவை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com