பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம்: தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு

மே மாதம் கொள்முதல் செய்த தேயிலை தொழிற்சாலைகள் குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.16. 30 காசுகள் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

நீலகிரியில் விளையும் பச்சை தேயிலையை மே மாதம் கொள்முதல் செய்த தேயிலை தொழிற்சாலைகள் குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.16. 30 காசுகள் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் தமிழக அரசின் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா்.

இந்நிலையில், தேயிலை தொழிற்சாலைகள் மே மாதம் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.16.30 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலை நிா்ணயிக்கப்படுள்ளதாகவும், இதனை தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும், இதனை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என்றும் தேயிலை வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com