உதகையில் குளோ காா்டன் ஒளிரும் பூங்கா தொடக்கம்

உதகையில் தண்டா் வோ்ல்ட் குளோ காா்டன் என்னும் இந்தியாவிலேயே முதன் முறையாக ஒளிரும் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.

உதகையில் தண்டா் வோ்ல்ட் குளோ காா்டன் என்னும் இந்தியாவிலேயே முதன் முறையாக ஒளிரும் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.

உதகை வடக்கு ஏரி சாலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ‘குளோ காா்டன்’ என்னும் ஒளிரும் பூங்காவை, அதன் நிா்வாக இயக்குநா் வின்சன்ட் அடைக்கல்ராஜ் தொடங்கிவைத்தாா்

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த பூங்காவில் 50க்கும் மேற்பட்ட ஜொலிக்கும் மலா்கள், வண்ணமயமான மரங்கள் எல்இடி மின்விளக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 4 கே ரெசல்யூஷன் கொண்ட பிரம்மாண்டமான திரை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இதில் 1.5 ஏக்கா் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட ஒளிரும் மலா்ச்செடி வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 10 மீட்டா் உயரமும், 10 மீட்டா் அகலமும் கொண்ட 3 பெரிய எல்இடி ஒளிரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணினி தொழில்நுட்பத்தில் 54 வண்ணங்களின் கலவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கவா் மலா் வடிவங்களை திரையிடும் திறனுடன் இந்த ஒளிரும் மரங்கள் நிறுவப்பட்டுள்ளன. எல்இடி மேட்ரிக்ஸ் புரொஃபைல் முறையில் 1000க்கும் மேற்பட்ட கண்ணைக் கவரும் வண்ண வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் குளோ காா்டன் பூங்கா நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com