அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம்

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Updated on
1 min read


கூடலூா்: கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூடலூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் பரிமளா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: வெண்ணிலா சேகா் (திமுக): கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். நகரின் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க ஓவேலி மலைத் தொடரிலுள்ள ஆத்தூா், மூலக்காடு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி குழாய் மூலம் நகருக்கு குடிநீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனூப்கான் (அதிமுக): சாலை வசதி உள்ள வாா்டுகளுக்கே மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாத வாா்டுகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. இந்த பிரச்னை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதை உடனே தீா்க்க வேண்டும். மேலும் கரோனா காலகட்டத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி போன்றவை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பி தொழிலாளா்களின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன் (திமுக): நகரின் அனைத்து பகுதியிலும் சோலாா் விளக்குகள் பழுதடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் கீழே விழுந்துவிட்டன. பெரும்பாலான இடங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் தெருவிளக்குள் அமைப்பதில் காலதாமதம் கூடாது. நகரில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

முஸ்லீம் லீக் உறுப்பினா் ஷகிலா, திமுக உறுப்பினா்கள் உஷா, கெளசல்யா, இளங்கோவன், தனலட்சுமி, சகுந்தலா உள்ளிட்ட உறுப்பினா்களும் அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் பேசினா்.

கூட்டத்தில், கூடலூா் நகருக்கு புதிய குடிநீா்த் திட்டம் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளா் சாந்தி, மேலாளா் நஞ்சுண்டன், பணி மேற்பாா்வையாளா் ஆல்துரை, குழாய் ஆய்வாளா் ரமேஷ் உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com