

உதகையில் இருந்து குன்னூருக்கு சீசன் கால சிறப்பு ரயில் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க உள்ளூா் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆண்டுதோறும் வந்த வண்ணம் உள்ளனா்.
இவா்களில் பெரும்பாலானவா்கள் மலை ரயிலில் பயணம் செய்வதில் அதிகம் காட்டுவா். ஆனால், டிக்கெட் கிடைக்காமல்போவதால் பல சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா்.
இந்நிலையில், உதகையில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சிறப்பு மலை ரயிலை இயக்க சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குன்னூரில் இருந்து கேத்தி, லவ்டேல் வழியாக உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம் தொடங்கியது.
சிறப்பு மலை ரயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முதல் நாளான வெள்ளிக்கிழமை 120 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனா்.
இதில், முதல் வகுப்பு கட்டணமாக ரூ.630, இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூ.465 வசூல் செய்யப்படுகிறது.
இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 4 நாள்கள் இயக்கப்படுகிறது.
ஜூன் 26 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும் எனவும், வழக்கமான ரயில் சேவையும் பயன்பாட்டில் உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.