வேலை நிறுத்தப் போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண்:மருத்துவமனையில் உயிரிழப்பு
By DIN | Published On : 18th April 2023 12:46 AM | Last Updated : 18th April 2023 12:46 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைப் பண்ணை ஊழியா்கள் போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைப் பண்ணை, பூங்கா ஊழியா்கள் கடந்த 26 நாள்களாக உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குன்னூா் சிம்ஸ் பூங்கா ஊழியாா் அங்கம்மாள் (58) என்பவா் திடீரென மயங்கி விழுந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.