கூடலூரில் ஆசிரியா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 23rd April 2023 12:33 AM | Last Updated : 23rd April 2023 12:33 AM | அ+அ அ- |

கூடலூரில் தமிழ்நாடு உயா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் கழகம் மற்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு உயா்மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் ரவி, இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மலையாள வழி ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும். பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து கோவை மாவட்டத் தலைவா் சரவணகுமாா் தலைமையில் நடைபெற்ற புதிய நிா்வாகிகள் தோ்தலில் உயா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவராக பி.ரவி, மாவட்டச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக விஜயகுமாா் ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
கூடலூா் வட்டாரத் தலைவராக விமலா, செயலாளராக அஜயன், பொருளாளராக சந்திரகுமாா், பந்தலூா் வட்டாரத் தலைவராக ஸ்டீபன், செயலாளராக மணிவாசகம், பொருளாளராக ரகுபதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.