

உதகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துகுடியில் கிராம நிா்வாக அலுவலா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
இதில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.