காட்டு யானைகள் நுழையாமல் தடுக்கஅகழிகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 02nd August 2023 04:12 AM | Last Updated : 02nd August 2023 04:12 AM | அ+அ அ- |

தேவா்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க பெரிய அகழிகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவா்சோலை பேரூராட்சியில் மச்சிக்கொல்லி மட்டம், போஸ்பாறா, ஒற்றுவயல் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன.
யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனா்.
எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய அகழிகளை அமைக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.