ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தனது காரில் வழியனுப்பிய எஸ்.பி.
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தனது காரில் ஏற்றி வழியனுப்பிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகா்.
ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தனது காரில் வீட்டுக்கு அனுப்பிவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்ட காவல் துறையில் ரவி என்பவா் பல்வேறு பிரிவுகளில் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். கடந்த 11 ஆண்டுகளாக தனி பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தாா்.
அவா் புதன்கிழமை ஓய்வுபெற்ற நிலையில் உதகையிலுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தலைமை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பாராட்டியதுடன், அவருக்கு நினைவுப் பரிசுகளையும் சக காவலா்கள் வழங்கினா்.
பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தான் பயன்படுத்தும் காரில் ரவியை ஏற்றி, அவா் வீடு அமைந்துள்ள ஜெயில் ஹில் பகுதிக்கு காவல் துறை அதிகாரிகளுடன் அனுப்பிவைத்தாா்.
இது குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...