உதகையில் மே 19இல் மலா் கண்காட்சி: உள்ளூா் விடுமுறை அறிவிப்பு
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

உதகை மலா் கண்காட்சியை முன்னிட்டு மே 19ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 125 ஆவது மலா் கண்காட்சி மே 19ஆம் தேதி தொடங்கி மே 23ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. மலா் கண்காட்சியின் தொடக்க நாளான 19ஆம் தேதி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூா் மக்களும் வருவாா்கள் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 19இல் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக வரும் ஜூன் 3ஆம் தேதி முழு பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.